வாழ்க்கை சில நேரங்களில் நம்மை ஒரு கேள்வி கேட்கும்! எப்பொழுதும் இருள் இருக்கும் நமக்கு வெளிச்சம் எங்கே? என்று?
Shiva Vishnu Tv
அந்தக் கேள்விக்கு பதிலாக நான் ஒரு திரைப்படத்தை கூறினால் உங்களால் ஏற்றுக் கள்ள முடியுமா? ஆம் உண்மைதான் அப்படி ஒரு திரைப்படம் இந்த உலகில் வந்திருக்கிறது! தமிழ் சினிமாவில் அல்ல உலக சினிமாவில். உலக சினிமாவின் முத்து என்று அனைவராலும் கூறப்படும் படம் அது. இன்று வரை அந்தப் படத்தை உலகமே தூக்கி வைத்து கொண்டடுகிறது.
அது ஒரு திரைப்படம் தான் ஆனால் சாதாரண படம் அல்ல! இருளை கிழித்து நம்பிக்கையின் கையைப் பிடித்து நம்மை அழைத்து செல்லும் ஒரு ஆன்மாவின் பயணம் தான் இந்த திரைப்படம்.
Shiva Vishnu Tv
பொதுவாக நகைச்சுவை என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல அது ஒரு கவசம். துயரத்தை நேருக்கு நேர் பார்த்து "நான் இன்னும் சிரிக்கிறேன்" என்று சொல்ல வைக்கும் அற்புதமான கவசம்.
அந்த கவசத்தோடு ஒரு தந்தை ஒரு குடும்பம் காலத்தின் கரும்படலம் படிந்த ஒரு சூழல் வளையத்தை கடக்கிறது.
இதுதான் அந்தப் படம் சொல்ல வருவது.
அந்தப் படத்தின் முழு கதையை நாங்கள் இங்கே சொல்ல போவதில்லை. ஏனென்றால் சில கதைகள் நீங்கள் பார்த்து தான் அனுபவிக்க வேண்டும் அப்படி ஒரு கதை தான் இந்த கதை.
இந்த படத்தை பார்த்த பிறகு என் உள்ளம் கொஞ்சம் மாறியிருக்கிறது. என் குழந்தைகள் தவறு செய்தாலும் அடிப்பதற்கு சற்று யோசிக்கிறேன். அவர்களை மிரட்டுவதற்கு யோசிக்கிறேன். அந்த அளவிற்கு இதன் தாக்கம் என்னுள் வந்துவிட்டது என்பதுதான் உண்மை.
சினிமா என்பது ஒரு கலை; சில சமயம் அது ஆசான். இந்தப் படம் அப்படிதான் அது வாழ்க்கையை பாடம் கேட்க வைக்கிறது.
உலக திரைப்பட திருவிழாக்கள் இந்த படத்தை போட்டி போட்டு பாராட்டின. கௌரவங்களும் விருதுகளும் வந்து குவிந்தது.
ஆனால் இந்த படத்தின் உண்மையான விருது? நம்முள் நடக்கும் அமைதியான மாற்றம். நாம் சிரிக்கும் விதம், நாம் அழும் விதமும் மாறிவிடுகிறது.
நான் பேச போகும் அந்த அற்புதமான படத்தின் பெயர் " life is beautiful" சில படங்கள் வாழ்க்கையை அழகாக்குவது இல்லை! அவை அழகே வாழ்க்கை என்று உணர்த்துகிறது இதுவும் அப்படித்தான்.
உங்கள் வாழ்க்கையில் ஒரு மறையாவது இந்த படத்தை பாருங்கள் என்று நாங்கள் பரிந்துரை செய்கிறோம். நீங்கள் ஒரு தந்தை, ஒரு தாய், ஒரு ஆசான், ஒரு சினிமா பிரியர், ஒரு கதை சொல்லி அல்லது ஒரு சாதாரண மனிதர் இதில் நீங்கள் எவராக இருந்தாலும் இந்த படம் உங்களுக்குள் அழகை உண்டாக்கும்.
Shiva Vishnu Tv
நம் வாழ்க்கையில் சில சம்பவங்கள் என்றும் அணையாத விளக்குகளாக இருந்து கொண்டே இருக்கும் " life is beautiful " அப்படி ஒரு விளக்கு. வாருங்கள் அந்த வெளிச்சத்தை சேர்ந்து பார்க்கலாம்.
சரி இப்போது லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல் படத்தின் கதையை மேலோட்டமாக பார்ப்போம். ஒரு கிராமத்தில் வாழும் சாதாரண இளைஞன் கனவுகளோடு நகரத்தை அடைகிறான். அவன் ஆசை கனவு, லட்சியம் எல்லாம் ஒரு நாள் தனியாக புத்தகக் கடை தொடங்க வேண்டும் என்பதே... ஆனால் வாழ்க்கை அவனுக்கு கொடுத்தது வேறு ஒரு ஹோட்டலில் சர்வர் வேலை.
அவன் அந்த வேலையை சாதாரணமாக நினைக்காமல் ரசித்து செய்தான். அவனின் சிரிப்பு, நகைச்சுவை உணர்வு, புத்திசாலித்தனத்தால் அனைவரையும் ஈர்க்கும் ஒருவனாக இருந்தான்.
இப்படி போய்க் கண்டிருக்கும் அவன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை சந்திக்கிறான் பார்த்ததும் காதல்
Shiva Vishnu Tv
.
அவளை கவர்வதற்காக சில முயற்சிகள் எடுக்கிறான். அந்த முயற்சிகள் வெற்றி பெறுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
காலங்கள் உருண்டு ஓடுகிறது... நாயகனுக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. நாயகன் தான் நினைத்தது போல் புத்தகத்தை தொடங்கி தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தான். அவர்களின் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இல்லை.
ஒரு சைக்கிளில் தனது மகனையும், தனது மனைவியும் உட்கார வைத்துக் கொண்டு அந்த மூவரும் சிரித்துக்கொண்டே அந்த நகரத்தை வலம் வரும் போது அந்த குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்கிறது.
இப்படி மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கும் அவர்கள் வாழ்க்கையில் விதி விளையாடுகிறது. இரண்டாம் உலகப் போர் உக்கிரமாக இருந்த காலகட்டம் அது அந்த நேரத்தில் அந்த சூழலில் அந்த குடும்பம் கேம்புக்கு
Shiva Vishnu Tv இழுக்கப்படுகிறது.
நாயகனின் குடும்பம் மட்டுமல்ல பல்வேறு மக்கள் வாங்கிய அடைத்து வைக்கப்பட்டு கொடுமையை அனுபவித்து வருகிறார்கள். அங்கே நடக்கும் அட்டுழியங்கள் மரண பயம், ஏற்படும் மரணங்கள் போன்றவைகள் பார்த்து அனைவரும் நடுங்கிப் போகின்றனர்.
அந்த சூழலில் ஒரு தந்தையின் பெரிய சவால்" இங்கே நடக்கும் கொடூரங்கள் தன் மகனை எள்ளளவும் பாதித்துவிடக்கூடாது" என்று யோசிக்கும் அவன் ஒரு யோசனை செய்து அதை செயல்படுத்தவும் செய்கிறான்.
Shiva Vishnu Tv
அதாவது தனது குழந்தையிடம் "நாம் அனைவரும் ஒரு பெரிய விளையாட்டில் கலந்து கொள்ள வந்துள்ளோம்" என்றும் "இங்கு நடக்கும் அனைத்தும் விளையாட்டு" என்றும் கூறுகிறான். இதனால் அந்த சிறுவன் அதன் பின் நடக்கும் அனைத்தையும் விளையாட்டாகவே பார்க்கிறான்.
இப்படி அங்கே எது நடந்தாலும் எந்த விபரீதங்கள் நடந்தாலும் அதை தன் மகனுக்கு இதுவும் ஒரு விளையாட்டு தான் இதுவும் ஒரு விளையாட்டு தான் என்பதை போல அவனை அவ்வப்போது சிரித்துக்கொண்டே தனது மொத்த வலியையும் தாங்கிக் கொண்டு படத்தின் இறுதிவரை செல்லும் நாயகன் கடைசியில் தன் குழந்தையை எப்படி காப்பாற்றினார் என்பது மீதி கதை.
Shiva Vishnu Tv
1997-ல் வெளிவந்த Life is Beautiful, அன்றைய உலகம் இன்னும் இரண்டாம் உலகப்போரின் நினைவுகளை தாங்கிக் கொண்டிருந்த சமயம்.
பாரம்பரியமாக அந்தப் போரின் கதைகள் துயரம் மட்டுமே காட்டின.
ஆனால் இந்தப் படம்—துயரத்தையும் நகைச்சுவையையும் இணைத்த ஒரு புதுமை.
வெளியானவுடன் Italy மட்டுமல்ல, Europe, America, Asia முழுவதும் பார்வையாளர்கள் கண்ணீர் மல்கக் கைத்தட்டினர்.
விமர்சகர்கள் இதை “மனித நேயம் சினிமாவின் உச்சம்” என்று பாராட்டினர்.
🏆 விருதுகள்
Shiva Vishnu TvCannes Film Festival (1998) – Grand Prix Winner.
Academy Awards (Oscars 1999) – மூன்று விருதுகள்:
Best Actor (Roberto Benigni)
Best Foreign Language Film
Best Original Dramatic Score
உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட விருதுகள், பல nomination-கள்.
🌟 ஏன் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்?
ஏனென்றால், இது கதை அல்ல—இது ஒரு பாடம்.
துயரத்தை எப்படி சிரிப்பாக மாற்ற முடியும் என்பதற்கான வாழ்ந்த சான்று.
தந்தையின் அன்பு, தியாகம், நம்பிக்கை—இவை வாழ்க்கையில் எதையும் வெல்ல வைக்கும் என்பதை உணர்த்துகிறது.
Shiva Vishnu Tv
நீங்கள் சினிமா ரசிகராக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும், அல்லது சாதாரண மனிதராக இருந்தாலும்—
Life is Beautiful உங்கள் இதயத்தில் அழியாத அடையாளம் வைக்கும்.
அதனால் இந்தப் படத்தை வாழ்க்கையில் குறைந்தது ஒருமுறை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
✨ Presented by SS Ramachandran
Founder & CEO,
Shiva Vishnu TV &
Shiva Vishnu TV Cinema
✨ To explore spiritual insights, temple histories, faith, and cultural stories ✨
👉 Follow our spiritual channel Shiva Vishnu TV on the social platforms below 👇
✨ ஆன்மீகம் தொடர்பான செய்திகள், கோவில்களின் வரலாறுகள், நம்பிக்கைகள், மற்றும் கலாச்சார பதிவுகளை அறிந்து கொள்வதற்கு ✨
👉 நமது ஆன்மீக சேனலான Shiva Vishnu TV-யை கீழே உள்ள சமூக வலைதளங்கள் & சேனல்கள் மூலம் தொடருங்கள் 👇
© 2025 Shiva Vishnu TV. All rights reserved.
No comments:
Post a Comment